Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டில்லி, மும்பையிலிருந்து வெளிநாடுகளுக்கு 8 சிறப்பு விமானங்கள்

டில்லி, மும்பையிலிருந்து வெளிநாடுகளுக்கு 8 சிறப்பு விமானங்கள்

By: Nagaraj Fri, 29 May 2020 10:45:55 PM

டில்லி, மும்பையிலிருந்து வெளிநாடுகளுக்கு 8 சிறப்பு விமானங்கள்

ஏர் இந்தியாவின் புதிய முடிவு... டில்லி, மும்பையிலிருந்து வெளிநாடுகளுக்கு 8 சிறப்பு விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா, நியூசிலாந்து, பிரிட்டன், ஸ்வீடன் ,ஜெர்மனி, தென்கொரியா போன்ற நாடுகளுக்கு 8 சிறப்பு விமானங்கள் வரும் ஜூன் 4 முதல் 6ம் தேதி வரை இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

overseas,air india,flights,movement,end ,
வெளிநாடு, ஏர் இந்தியா, விமானங்கள், இயக்கம், முடிவு

டில்லி- ஆக்லேண்ட் இடையே ஜூன் 4ம் தேதியும், டில்லி-சிகாகோ மற்றும் டில்லி - ஸ்டாக்ஹோம் இடையே ஜூன் 5ம் தேதியும், மும்பை-லண்டன், மும்பை-நியூயார்க் இடையே ஜூன் 6ம் தேதியும், டில்லி-நியூயார்க் மற்றும் டில்லி-சியோல் இடையே ஜூன் 6ம் தேதியும் விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானங்களின் பயணம் செய்வதற்கான முன்பதிவு வரும் சனிக்கிழமை பகல் 11 மணிக்கு துவங்குகிறது. ஏர்இந்தியா இணையதளத்திலும் அலுவலகங்களிலும் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக ஆறு நாடுகளில் சிக்கி உள்ள இந்தியர்களை ஏர் இந்தியா மீட்க உள்ளது. மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் முதற்கட்டத்தில் மே 7 முதல் மே 14 வரை இயக்கப்பட்ட 64 விமானங்களில் 14,800 இந்தியர்கள் இந்தியா வந்தடைந்தனர்.

இந்நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் மே 16ம் தேதி துவங்கியுள்ளது.

Tags :