Advertisement

தேனியில் ஒரே நாளில் 80 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Monisha Sat, 05 Sept 2020 11:35:58 AM

தேனியில் ஒரே நாளில் 80 பேர் கொரோனாவால் பாதிப்பு

தேனியில் ஒரே நாளில் 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,074 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 5,976 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,51,827 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 51,633 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,92,507 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். ஆனாலும் இதுவரை 7,687 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

theni district,corona virus,infection,death,treatment ,தேனி மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

இந்நிலையில் தேனியில் ஒரே நாளில் 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனியில் ஏற்கனவே 12,994 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 80 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,074 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 11,840 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 149 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கண்டிப்பாக வெளியில் செல்லும் போது முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :
|