Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 80 ஆயிரம் டன் கான்கிரீட் குப்பை... நொய்டா இரட்டை கோபுரம் இடிப்பால்

80 ஆயிரம் டன் கான்கிரீட் குப்பை... நொய்டா இரட்டை கோபுரம் இடிப்பால்

By: Nagaraj Tue, 30 Aug 2022 11:56:30 PM

80 ஆயிரம் டன் கான்கிரீட் குப்பை... நொய்டா இரட்டை கோபுரம் இடிப்பால்

டெல்லி: 80 ஆயிரம் டன் கான்கிரீட் குப்பை... நொய்டாவில் உள்ள இரட்டை கோபுரங்கள் நேற்று வெடி வைத்து தகர்க்கப்பட நிலையில், இது அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாட்டின் மிகப் பெரிய கட்டிடங்களில் ஒன்றான நொய்டா இரட்டை கோபுரங்கள் இது சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்டு உள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாகக் குடியிருப்போர் நலச் சங்கம் தொடர்ந்த வழக்கில் கட்டிடத்தை இடிக்க 2014இல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

இதையடுத்து கட்டுமானத்தை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. மொத்தம் 3700 கிலோ வெடிமருந்தைப் பயன்படுத்தி அந்தக் கட்டிடம் வெறும் 10 நொடிகளில் தரைமட்டமாக்கப்பட்டது. இதற்காக அங்குச் சுற்றி 500 மீட்டர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்டது. மேலும், சுற்றியிருக்கும் கட்டிடங்களில் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

twin towers,demolition,concrete debris,bad smell,residents ,இரட்டைக் கோபுரம், இடிப்பு, கான்கிரீட் குப்பை, மோசமான வாசம், குடியிருப்பாளர்கள்

இந்தச் சூழலில் கட்டிடம் வெடி வைத்து பத்திரமாகத் தகர்க்கப்பட்டது. மொத்தம் 915 குடியிருப்புகள் மற்றும் 21 கடைகளைக் கொண்ட அந்த கட்டிடம் தகர்க்கப்பட்டதில் 80,000 டன்கள் வரையிலான கான்கிரீட் இடிபாடுகள் சேர்ந்துள்ளன. waterfall implosion முறையில் கட்டிடம் இடிக்கப்பட்டதால் சுமார் 50 ஆயிரம் டன் குப்பைகள் கட்டிடத்தை சுற்றியே விழுந்துவிட்டது.

மிகவும் பாதுகாப்பான முறையில் கட்டிட இடிப்பு மேற்கொள்ளப்பட்டதால் அருகே இருந்த சில கட்டிடங்களின் கண்ணாடி உடைந்தது போன்ற சிறு பாதிப்புகளைத் தவிர வேறு எதுவும் ஏற்படவில்லை. கட்டிடம் இடிக்கப்படும் முன்னரே தூசி மற்றும் குப்பைகளை அகற்றுவது தான் இரண்டு மிக முக்கியமான பிரச்சினையாக இருக்கும் எனக் கூறப்பட்டது. இந்த பணிகளை மேற்கொள்ள தண்ணீர் டேங்கர்கள் மற்றும் துப்புரவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், பல நூறு துப்புரவுப் பணியாளர்களும் இதில் பயன்படுத்தப்படுகிறார்கள். அடுத்த மூன்று மாதங்களில் சுமார் 20,000 முதல் 25,000 டன் குப்பைகள் அறிவியல் ரீதியாக அங்கிருந்து அகற்றப்படும். மீதமுள்ளவை அங்கேயே வைக்கப்பட்ட மற்ற பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும், சுற்றியுள்ள பகுதிகளில் மோசமான வாசம் வீசுவதாகவும் சில குடியிருப்பாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

Tags :