Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜெர்மனியில் விமானிகள் வேலை நிறுத்தத்தால் 800 விமானங்கள் ரத்து

ஜெர்மனியில் விமானிகள் வேலை நிறுத்தத்தால் 800 விமானங்கள் ரத்து

By: Nagaraj Fri, 02 Sept 2022 9:46:43 PM

ஜெர்மனியில் விமானிகள் வேலை நிறுத்தத்தால் 800 விமானங்கள் ரத்து

ஜெர்மனி: 800 விமானங்கள் ரத்து... விமானிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக ஜெர்மனியின் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் இன்று 800 விமானங்களை ரத்து செய்ய உள்ளது.

ஜெர்மனியில் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஊதிய உயர்வு கேட்டு விமானிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், நிறுவனம் இதனை நிராகரித்ததால் விமானிகள் சங்கம் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது.

stoppage,passenger,impact,cargo flights,service,stoppage ,வேலை நிறுத்தம், பயணிகள், பாதிப்பு, சரக்கு விமானங்கள், சேவை, நிறுத்தம்

ஊதிய உயர்வு மற்றும் சலுகைகளை விமானிகள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதையடுத்து, ஜெர்மனியின் பிராங்பேர்ட் மற்றும் முனிச்சில் இருந்து புறப்படக்கூடிய சுமார் 800 லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சரக்கு விமானங்களும் அடங்கும்.

இதனால் அங்குள்ள 1,30,000 பயணிகள் பாதிக்கப்படக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|