Advertisement

மோசமான வானிலையால் 8000 விமான சேவைகள் பாதிப்பு

By: Nagaraj Sat, 18 June 2022 7:41:50 PM

மோசமான வானிலையால் 8000 விமான சேவைகள் பாதிப்பு

அமெரிக்கா: விமான சேவைகள் பாதிப்பு... அமெரிக்காவில் புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்புக்குள்ளாகின.

இந்நிலையில் விமானசேவைகள் திடீரென நிறுத்தப்பட்டதால் கோடைகால விடுமுறை மற்றும் நினைவு தின விடுமுறைகளை கொண்டாட காத்திருந்த மக்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

passengers,distress,delays,flights,services,damage ,பயணிகள், அவதி, தாமதம், விமானங்கள், சேவைகள், பாதிப்பு

மிஸ்ஸெசசெபி, விர்ஜிணா, நியூ யார்க், வாஷிங்டன் உள்ளிட்ட மாகாணத்தில் வீசிய புயல் காற்று மற்றும் மோசமான வானிலையால் ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் விமான நிலையங்களில் பயணிகளின் கும்பல் அதிகளவில் காணப்பட்டது.

மேலும் 8 ஆயிரத்து 800 விமானங்கள் தாமதாக இயக்கப்பட்டதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். மேலும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சியும் அடைந்தனர். மோசமான வானிலையால்தான் இதுபோன்ற விமான சேவை ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டாலும் பயணிகள் நிலை மிகவும் பரிதாபகரமாக இருந்தது. மேலும் குழந்தைகளுடன் வந்திருந்த பயணிகள் வெகுவாக வேதனையில் ஆழ்ந்தனர்.

Tags :
|