Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 8,096 பேர் சிகிச்சை

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 8,096 பேர் சிகிச்சை

By: Monisha Wed, 28 Oct 2020 3:19:09 PM

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 8,096 பேர் சிகிச்சை

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 8 ஆயிரத்து 096 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,97,077 ஆக உள்ளது. 8,096 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 1 லட்சத்து 85 ஆயிரத்து 374 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 94% ஆக உள்ளது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 3 ஆயிரத்து 607 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் விகிதம் 1.83% ஆக உள்ளது.

chennai,corona virus,infection,treatment,kills ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 587
அண்ணா நகர் - 663
தேனாம்பேட்டை - 553
தண்டையார்பேட்டை - 303
ராயபுரம் - 468
அடையாறு- 513
திரு.வி.க. நகர்- 559
வளசரவாக்கம்- 313
அம்பத்தூர்- 436
திருவொற்றியூர்- 118
மாதவரம்- 199
ஆலந்தூர்- 244
பெருங்குடி- 299
சோழிங்கநல்லூர்- 139
மணலி - 88

Tags :