Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எத்தியோப்பியாவில் பிரபல பாடகர் கொல்லப்பட்டதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் 81 பேர் உயிரிழப்பு

எத்தியோப்பியாவில் பிரபல பாடகர் கொல்லப்பட்டதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் 81 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Thu, 02 July 2020 10:18:48 AM

எத்தியோப்பியாவில் பிரபல பாடகர் கொல்லப்பட்டதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் 81 பேர் உயிரிழப்பு

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் உள்ள பிரபல பாடகரான ஹஹலூ ஹண்டிசா கடந்த திங்கட்கிழமை மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை உள்நோக்கத்தோடு திட்டமிட்டு நடைபெற்றதாக தகவல்கள் பரவின. ஹஹலூ ஹண்டிசா ஒரோமியா என்ற இனக்குழுவை சேர்ந்தவர் ஆவார். இதனால் அவரின் கொலைச்சம்வத்தை அடுத்து அந்த இன மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரோமியா மாகாணத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இந்த இனமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

ethiopia,singer,protest,violent ,எத்தியோப்பியா, பாடகர், எதிர்ப்பு, வன்முறை

சில பகுதிகளில் இந்த போராட்டங்கள் வன்முறையாக வெடித்தது. இதனால் போராட்டங்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், பல கடைகள் போராட்டக்காரர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

பாடகர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதற்கு எதிராக கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த போராட்டத்தில் இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் வன்முறை இன்னும் நடைபெற்று வருவதால், மேலும் உயிரிழப்புகள் ஏற்படலாம்.

Tags :
|