Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆந்திராவில் கொரோனாவால் புதிதாக 813 பேர் பாதிப்பு; 12 பேர் பலி

ஆந்திராவில் கொரோனாவால் புதிதாக 813 பேர் பாதிப்பு; 12 பேர் பலி

By: Nagaraj Mon, 29 June 2020 11:22:36 AM

ஆந்திராவில் கொரோனாவால் புதிதாக 813 பேர் பாதிப்பு; 12 பேர் பலி

கடந்த 24 மணிநேரத்தில் ஆந்திராவில் கொரோனா தொற்றால் புதிதாக 813 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் பலியாகி உள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆந்திராவில் நோய் தொற்றுக்கு அதிகபட்ச பாதிப்பாக இன்று 813 பேர் பாதிக்கப் பட்டது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

treatment,corona,vulnerability,andhra pradesh,godavari ,சிகிச்சை, கொரோனா, பாதிப்பு, ஆந்திரா, கோதாவரி

மாநிலத்தின் மொத்த பாதிப்புகளின்எண்ணிக்கை 13,098 ஆக உயர்ந்தது. நேற்று 796 பேர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் புதிதாக 12 பேர் பலியாகினர். இதையொட்டி, மாநிலத்தின் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்தது.

ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 25,778 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. மாநிலத்தில் தற்போது வரை 8,41,860 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இன்று 401 பேர் குணமடைந்தனர். நோய் தொற்றுக்கு ஆந்திராவில் இதுவரை 5,908 பேர் குணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது 7,021 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக பலியானவர்களில், 6 பேர் கர்னூல், 5 பேர் கிருஷ்ணா மாவட்டத்தையும், ஒருவர் மேற்கு கோதாவரியையும் சேர்ந்தவர்கள் ஆவர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Tags :
|