Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பீகார் மாநிலத்தில் இடி மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலத்தில் இடி மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Fri, 26 June 2020 12:33:13 PM

பீகார் மாநிலத்தில் இடி மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழப்பு

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளநிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக இடியுடன் கனமழை பெய்து வருகிறது.

இந்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்துள்ளது. பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையின் போது இடி மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழந்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bihar,lightning,83 dead,nithish kumar ,பீகார், 83உயிரிழப்பு,இடி மின்னல்,நிதிஷ் குமார்

கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 13 பேரும், மதுபானி, நவடாவில் தலா 8 பேர், பாகல்பூர், சிவானில் தலா 6 பேர், தர்பங்கா, பங்கா, கிழக்கு சம்பரனில் தலா 5 பேர், ககாரியா, அவுரங்காபாத்தில் தலா 3 பேர் என மொத்தம் ஒரே நாளில் 83 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், இடி மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குதனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படுவதாக உறுதியளித்துள்ளார்.

Tags :
|