Advertisement

தெலுங்கானாவில் நேற்று 891 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Monisha Thu, 25 June 2020 12:20:10 PM

தெலுங்கானாவில் நேற்று 891 பேர் கொரோனாவால் பாதிப்பு

தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 94 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4.81 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

telangana,coronavirus,vulnerability,india,deaths ,தெலுங்கானா,கொரோனா வைரஸ்,பாதிப்பு,இந்தியா,உயிரிழப்பு

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 4,73,105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14894 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில், தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தெலுங்கானாவில் நேற்று 891 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 444 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மாநிலத்தில் 4361 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி 225 பேர் பலியாகியுள்ளனர் எனத் தெலுங்கானா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags :
|