Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நடப்பாண்டு தென் மேற்கு பருவமழை காலத்தில் 8% அதிக மழைப்பொழிவு ..வானிலை ஆய்வு மையம்

நடப்பாண்டு தென் மேற்கு பருவமழை காலத்தில் 8% அதிக மழைப்பொழிவு ..வானிலை ஆய்வு மையம்

By: vaithegi Wed, 04 Oct 2023 12:38:10 PM

நடப்பாண்டு தென் மேற்கு பருவமழை காலத்தில் 8% அதிக மழைப்பொழிவு  ..வானிலை ஆய்வு மையம்

சென்னை: சமீபத்திய வருடங்களில் நாட்டில் கோடை காலங்களில் வெப்பநிலையானது வழக்கத்தை விட அதிகமாக மக்களை வாட்டி வதைத்து கொண்டு வருகிறது. இதே போல் பருவமழை காலங்களில் மற்றும் குளிர் காலங்களில் வழக்கத்தை விட தட்பவெப்ப நிலை மாறி அதிக பாதிப்புகளை மக்களுக்கு ஏற்படுத்தி கொண்டு வருகிறது. வழக்கமாக ஜூன் முதல் செப்டம்பர் மாதங்கள் வரையிலான காலங்களில் தென்மேற்கு பருவமழை பொழிவு இருக்கும்.

இந்த நிலையில் தற்போது தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் நடைபாண்டு பருவமழை குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்தாண்டு பருவமழையானது இயல்பை விட சற்று அதிகமாக இருக்கும்

meteorological center,monsoon ,வானிலை ஆய்வு மையம் ,பருவமழை


இதையடுத்து நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வழக்கத்தை விட 8 சதவீதமான மழைப்பொழிவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடமேற்கு பருவமழை காலங்களில் இதே போன்று வழக்கத்தை விட அதிகமான மழைப்பொழிவுகள் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் தனது கணிப்பை வெளியிட்டு உள்ளது.

Tags :