Advertisement

குமரி மாவட்டத்திற்கு வரும் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை

By: vaithegi Sat, 03 Sept 2022 4:52:41 PM

குமரி மாவட்டத்திற்கு வரும் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை

நாகர்கோவில்: குமரி மாவட்டத்திற்கு வரும் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை .. குமாி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 8-ந் தேதி குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

local holiday,nagercoil ,உள்ளூர் விடுமுறை ,நாகர்கோவில்

இதனை அடுத்து 8-ந் தேதி அன்று அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்கு பதில் 10-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் குமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகை தினத்திற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டத்தின் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 8-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :