Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேளாங்கண்ணியில் செப்டம்பர் 8ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை

வேளாங்கண்ணியில் செப்டம்பர் 8ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை

By: vaithegi Mon, 29 Aug 2022 4:28:07 PM

வேளாங்கண்ணியில் செப்டம்பர் 8ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை

வேளாங்கண்ணி: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி ஊர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள்.

இதையடுத்து தற்போது வேளாங்கண்ணியில் 3 அற்புதங்களை நடத்திய அன்னை மரியாவின் பிறந்த நாள் வருகிற செப்டம்பர் 8ம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. அன்னை மரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆண்டு பெருவிழா கொண்டாடப்பட்டு கொண்டு வருகிறது. அதனால் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

local holiday,velankanni , உள்ளூர் விடுமுறை,வேளாங்கண்ணி

இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலய ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நாளான வருகிற செப்டம்பர் 8ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அந்தவகையில் இந்த நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதே போன்று கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களும் இந்த விடுமுறை பொருந்தும். இதற்கு மாற்று வேலை நாளாக செப்டம்பர் 24ம் தேதி வியாழக்கிழமை என கூறியுள்ளார்.

Tags :