Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறைந்து வரும் கொரோனா... 9 சிறப்பு மையங்கள் மூடல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறைந்து வரும் கொரோனா... 9 சிறப்பு மையங்கள் மூடல்

By: Monisha Tue, 03 Nov 2020 4:10:53 PM

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறைந்து வரும் கொரோனா... 9 சிறப்பு மையங்கள் மூடல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 10 கொரோனா சிறப்பு மையங்களில் 9 மையங்கள் மூடப்பட்டு ஒரு மையம் மட்டுமே செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 164 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

மாவட்டத்தில் கொரோனா தெற்றால் 14, 703 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 14,344 பேர் குணமாகி வீடு திரும்பினர். 178 பேர் இறந்துள்ளனர். தற்போது 181 பேர் அரசு தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 25 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

ranipettai,corona virus,vulnerability,normalcy,specialty center ,ராணிப்பேட்டை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,இயல்பு நிலை,சிறப்பு மையம்

மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 10 இடங்களில் கொரோனா சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்ததால் முதலில் 7 மையங்கள் மூடப்பட்டு 3 மையங்களில் மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் 88 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சை மையங்களில் உள்ளதால் மேலும் 2 மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வாலாஜாவில் உள்ள ஒரு மையம் மட்டுமே தற்போது இயங்கி வருகிறது.

Tags :