Advertisement

நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி

By: Nagaraj Sun, 13 Sept 2020 5:36:06 PM

நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி

நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி... நேபாளத்தில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் காணாமல் போன 22 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நேபாளத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே இன்று (ஞாயிற்றுக் கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் சிந்துபால்சாக் மாவட்டத்தின் நாக்புஜே உள்ளிட்ட மூன்று கிராமப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.

nepal,landslide,identification,rescue work,22 people ,நேபாளம், நிலச்சரிவு, அடையாளம், மீட்கும் பணி, 22 பேர்

அதிகாலை கிராம மக்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது நிலச்சரிவு ஏற்பட்டதால் ஏராளமான மக்கள் இடிபாடுகளில் சிக்கினர். தகவல் அறிந்து விரைந்த மீட்புப்படையினர் 7 பேரை சடலமாக மீட்டனர். மேலும் போடெகோஷி மற்றும் சுன்கோஷி ஆகிய நதிகளில் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட நபர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூன்று கிராமங்களிலும் 11 வீடுகள் நிலச்சரிவில் முழுமையாக சேதமடைந்துள்ளன. காணாமல் போன 22 பேரை மீட்கும்பணி நடைபெற்று வருகிறது. இதனால் மீட்புப் பணிகளில் நேபாள ராணுவத்தினர், காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நேபாளத்தில் நடப்பாண்டில் மட்டும் நிலச்சரிவில் சிக்கி 351 பேர் உயிரிழந்தனர். 85 பேர் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|