Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவின் 90 சதவீத பகுதிகள் வெப்ப அலையால் பாதிக்கப்பட கூடும் அதிச்சி தகவல்

இந்தியாவின் 90 சதவீத பகுதிகள் வெப்ப அலையால் பாதிக்கப்பட கூடும் அதிச்சி தகவல்

By: vaithegi Thu, 20 Apr 2023 3:17:34 PM

இந்தியாவின் 90 சதவீத பகுதிகள் வெப்ப அலையால் பாதிக்கப்பட கூடும் அதிச்சி தகவல்

இந்தியா: காலநிலை மாற்றம் காரணமாக பல சூழ்நிலைகளால் ஆண்டுக்கு ஆண்டு வெப்பத்தின் அளவானது உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதுகுறித்து இங்கிலாந்தை சேர்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து அதில் இந்தியாவில் 90 சதவீத இடங்கள் வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ரமித் தேப்நாத் மற்றும் அவரது குழுவினரால் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவில் பெரும்பாலான பகுதிகள் வெப்ப அலையால் பாதிக்கப்படும் எனவும், அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லி கடுமையான வெப்ப அலை தாக்துதலுக்கு உள்ளாகும் என தெளிவுபடுத்துகிறது.

இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 17,000 க்கும் மேற்பட்டோர் வெப்ப அலைகளால் உயிரிழந்துள்ளனர் என்றும் ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நவிமும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற அரசு விருது வழங்கும் விழாவில் 13 பேர் வெப்பத்தின் தாக்கத்தினால் உயிரிழந்தனர். இதுபோல தான் கடந்த 50 ஆண்டுகளில் 17 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

heat wave,india , வெப்ப அலை,இந்தியா


எனவே வெப்ப அலைகளின் தாக்கத்தை இந்தியா உடனடியாக எதிர்கொள்ளத் தவறினால், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் இந்தியாவின் முன்னேற்றம் பாதிக்கப்படும் என அவர்கள் எச்சரித்தனர்.டெல்லி அரசாங்கத்தின் பாதிப்பு மதிப்பீட்டின்படி, வடிவமைக்கப்பட்ட மற்றும் செயல்படுத்தப்பட்ட தற்போதைய வெப்பநிலையை எதிர்கொள்ளும் திட்டங்களில் மேற்கூறிய உரிய மதிப்பீடுகள் இல்லை எனவும் இந்த ஆய்வு கூறுகிறது. மேலும் இது டெல்லியில் உள்ள “குறைந்த” காலநிலை-பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் கூட அதிக வெப்ப அலை அபாயத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது.

இதையடுத்து இம்மாத தொடக்கத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம், வடமேற்கு மற்றும் தீபகற்பப் பகுதிகளைத் தவிர, ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை நிலவும் என்று கணித்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் மத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கமான வெப்ப அலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :