Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் நாயிடமிருந்து தங்கையை காப்பாற்றிய சிறுவன் முகத்தில் 90 தையல்

அமெரிக்காவில் நாயிடமிருந்து தங்கையை காப்பாற்றிய சிறுவன் முகத்தில் 90 தையல்

By: Karunakaran Thu, 16 July 2020 6:07:55 PM

அமெரிக்காவில் நாயிடமிருந்து தங்கையை காப்பாற்றிய சிறுவன் முகத்தில் 90 தையல்

அமெரிக்காவின் வையோமிங் மாநிலத்தின் சயன் நகரில் பிரிட்ஜர் என்ற சிறுவன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி அன்று தனது தங்கையை ஒரு நாய் கடிக்க வருவதைப் பார்த்த பிரிட்ஜர் உடனடியாக முன்னால் பாய்ந்து நாயை தடுத்துள்ளார்.

இதனால் பிரிட்ஜரின் முகத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தங்கையை இழுத்துக் கொண்டு வேகமாக ஓடிக் காப்பாற்றியுள்ளார். இதுகுறித்த நிகழ்வை பிரிட்ஜரின் அத்தை தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

america,dog,90 stitches,sister ,அமெரிக்கா, நாய், 90 தையல், சகோதரி

அங்கு யாராவது இறந்து போக வேண்டும் என்று இருந்திருந்தால் அது நானாக இருக்கட்டும் என்று நினைத்தேன் என பிரிட்ஜர் கூறியதாக பிரிட்ஜரின் அத்தை கூறியுள்ளார். மேலும் பிரிட்ஜரின் அத்தை, ஹல்க்காக நடித்த மார்க் ரஃபல்லோ, தாராக நடித்த க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த், அயர்ன்மேன் ராபர்ட் டவுனி ஜூனியர் என பல்வேறு நாயகர்களை டேக் செய்துள்ளார்.

நாயுடன் நடந்த மோதலில் பிரிட்ஜரின் முகம் படு மோசமாகக் காயமடைந்துள்ளது. கிட்டத்தட்ட 90 தையல்கள் பிரிட்ஜரின் முகத்தில் போடப்பட்டுள்ளது. பிரிட்ஜர் பற்றிய பதிவைப் பகிர்ந்திருக்கும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் மார்க் ரஃபல்லோ மற்றும் ஆன் ஹாத்வே ஆகியோர் அவரது துணிச்சலை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

Tags :
|