Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2000 ரூபாய் நோட்டுகளில் 93% வங்கிகள் வசம் வந்து சேர்ந்துள்ளது .. ரிசர்வ் வங்கி

2000 ரூபாய் நோட்டுகளில் 93% வங்கிகள் வசம் வந்து சேர்ந்துள்ளது .. ரிசர்வ் வங்கி

By: vaithegi Sat, 02 Sept 2023 11:01:05 AM

2000 ரூபாய் நோட்டுகளில் 93% வங்கிகள் வசம் வந்து சேர்ந்துள்ளது  .. ரிசர்வ் வங்கி

இந்தியா: ரிசர்வ் வங்கி, ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் அறிவிப்பினை கடந்த மே 19-ம் தேதி வெளியிட்டது. இந்நோட்டுகளை வருகிற 30-ம் தேதி வரையில் மக்கள் மாற்றிக்கொள்ளலாம் என்று கால அவகாசமும் வழங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் ரூ.2,000 நோட்டுகளை எளிதான முறையில் வங்கிகளில் மாற்றிக்கொள்ள போதுமான முன்னேற்பாடுகள் செய்யபட்டு உள்ளது.

இதனை அடுத்து “வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் 31, 2023 வரை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.32 லட்சம் கோடி. மேலும் , புழக்கத்தில் உள்ள எஞ்சிய ரூ.2,000 நோட்டுகளின் மதிப்பானது தற்போது ரூ.24,000 கோடி என்று உள்ளது.

rbi,2000 rupee note ,ரிசர்வ் வங்கி,2000 ரூபாய் நோட்டு

எனவே இதன்படி புழக்கத்தில் இருந்த 93 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன” என ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

கடந்த 2016-ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமலான போது புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதுபோன்று இல்லாமல் 2,000 ரூபாய் நோட்டுக்கு கால அவகாசம் கொடுத்து உள்ளது. வருகிற 30-ம் தேதி வரையில் இந்த கரன்சி நோட்டுகள் செல்லுபடியாகும்.


Tags :
|