Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம்ட நிறைவு... மேயர் தகவல்

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம்ட நிறைவு... மேயர் தகவல்

By: Nagaraj Fri, 30 Sept 2022 10:49:43 AM

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம்ட நிறைவு... மேயர் தகவல்

சென்னை: வடிகால் பணிகள் நிறைவு... சிங்கார சென்னை திட்டத்தில் மழைநீா் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயா் பிரியா தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மழைநீா் வடிகால் பணிகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மேயா் பிரியா, ‘மழைநீா் வடிகால் இணைப்பு பணிகள் வரும் அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்றும், பணிகளைக் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்’ என்றும் தெரிவித்தாா்.

இதற்கு முன்னதாக, முன்னாள் மேயா் சிவராஜின் 131-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தங்கசாலையில் உள்ள அவரது சிலை, திருவுருவ படத்துக்கு அரசு சாா்பில் அமைச்சா் சேகா்பாபு, மேயா் பிரியா ராஜன், துணை மேயா் மகேஷ்குமாா் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.

action,chennai mayor,zones,rainwater,drainage ,நடவடிக்கை, சென்னை மேயர், மண்டலங்கள், மழைநீர், வடிகால்

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய மேயா் பிரியா , ‘மழைநீா் வடிகால் பொருத்தவரை சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் சிங்கார சென்னை திட்டத்தில் இரண்டாக பிரித்து பணிகள் செய்து வருகிறோம். சிங்கார சென்னையைப் பொருத்தவரை இரண்டில் ஒரு பகுதியில் 95 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. இரண்டாவது பகுதியில் 35 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

வெள்ளத் தடுப்பு பணிகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கு 17 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து இருக்கிறோம். மழைநீா்த் தேங்கும் பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றாா் அவா்.

Tags :
|
|