Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாமக்கலில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அக்டோபர் 9ம் தேதி விடுமுறை

நாமக்கலில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அக்டோபர் 9ம் தேதி விடுமுறை

By: vaithegi Fri, 07 Oct 2022 2:01:12 PM

நாமக்கலில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு  அக்டோபர் 9ம் தேதி விடுமுறை

நாமக்கல் : தமிழகத்தில் மதுபான விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு கொண்டு வருகிறது. இதனால் முறையாக நேரம் அறிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து முக்கிய பண்டிகை நாட்களில், விழா காலங்களில் மற்றும் முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் அல்லது நினைவு நாட்களில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு விடுகின்றன. இந்த நிலையில், வரும் அக்டோபர் 9ம் தேதியான ஞாயிற்று கிழமை இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நபிகள் நாயகம் முகமது நபி அவர்களின் பிறந்த தினம் வர உள்ளது.

tasmac shop,liquor,holidays ,டாஸ்மாக் கடை,மதுபானம் ,விடுமுறை

இதை உலக முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள். நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எனவே அதன்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் அவர்கள் தற்போது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், அக்டோபர் 9ம் தேதியன்று மிலாது நபி தினத்தை முன்னிட்டு அடைக்கப்பட வேண்டும் எனவும், அதை மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
|