Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மலப்புரத்தை சேர்ந்த 110 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து குணமடைந்தார்

மலப்புரத்தை சேர்ந்த 110 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து குணமடைந்தார்

By: Karunakaran Sun, 30 Aug 2020 1:02:12 PM

மலப்புரத்தை சேர்ந்த 110 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து குணமடைந்தார்

கேரள மாநிலம் மலப்புரம் ரண்டத்தாணி சேர்ந்த பாத்து என்ற மூதாட்டிக்கு 110 வயதாகிறது. இவர் கடந்த 18-ந்தேதி கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு மலப்புரம் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி சைலஜா கூறுகையில், பாத்துவின் மகளுக்கு கொரோனா தொற்று இருந்தது. இதனால் அவர் மூலமாக பாத்துவிற்கும் கொரோனா பரவியதாகவும், 110 வயதுடைய அவர் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் கூறினார்.

110 year old woman,malappuram,corona virus,kerala ,110 வயது பெண், மலப்புரம், கொரோனா வைரஸ், கேரளா

பாத்து முழு ஒத்துழைப்பு அளித்ததால் தான் அவர் பூரண குணம் அடைந்து கொரோனாவை வென்றுள்ளார். இது கேரள மருத்துவத்துறைக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது என சுகாதாரத்துறை மந்திரி சைலஜா கூறினார். கேரளாவில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களில் அதிக வயதுடையவர், பாத்து தான்.

இதற்கு முன் கொரோனா பதிப்பில் இருந்து கொல்லம் மாவட்டம் அஞ்சலையை சேர்ந்த அஸ்மா பீவி (105), ஆலுவாவை சேர்ந்த பரீத் (103) ஆகியோர் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் ஆவார். தற்போது இவர்களை விட பாத்து அதிக வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :