Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எத்தியோப்பியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 114 வயது முதியவர்

எத்தியோப்பியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 114 வயது முதியவர்

By: Nagaraj Thu, 25 June 2020 8:59:00 PM

எத்தியோப்பியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 114 வயது முதியவர்

எத்தியோப்பியாவை சேர்ந்த 114 வயது முதியவர் ஒருவருக்கு பிப்ரவரி மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது அதன் பாதிப்பில் இருந்து அவர் முழுவதுமாக குணமடைந்துள்ளார்.

சீனாவின் வூகானில் கிளம்பிய கொரோனா வைரஸ் இன்று உலகில் நுழையாத இடங்களே இல்லை. உலகம் முழுவதும் பரவி உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இவ்வைரஸ் ஆட்கொல்லி போன்றது என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

elderly,healed,corona,affected,ethiopia ,முதியவர், குணமடைந்தார், கொரோனா, பாதிப்பு, எத்தியோப்பியா

இந்நிலையில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த 114 வயது தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளார். இந்த தகவலை எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் மருத்துவமனை நடத்தி வரும் யாரெட் அகிடேவ் என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பிப்ரவரி மத்தியில் தனது மருத்துவமனையில் முதியவர் சேர்க்கப்பட்டு, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தற்போது அவர் பூரணமாக குணமடைந்து நலமுடனும், நல்ல ஆயுளுடனும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எத்தியோப்பியாவில் இதுவரை 5,000 பேருக்கு கொரோனா உள்ளது. 75 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|
|