Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸைக் குணப்படுத்துவதற்கு சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்த 14 வயது சிறுமி

கொரோனா வைரஸைக் குணப்படுத்துவதற்கு சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்த 14 வயது சிறுமி

By: Karunakaran Mon, 19 Oct 2020 3:53:37 PM

கொரோனா வைரஸைக் குணப்படுத்துவதற்கு சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்த 14 வயது சிறுமி

அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிகா செப்ரோலுக்கு வயது 14. இவர், டெக்ஸாஸ் மாகாணத்தின் ஃப்ரிஸ்கோ பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் கொரோனா வைரஸைக் குணப்படுத்தும் சிகிச்சை முறையைக் கண்டறிந்ததற்காக 2020-ம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானி விருதை வென்றுள்ளார். இதனால் அவருக்கு 18 லட்ச ரூபாய் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

சிலிகோ முறையின் மூலம் தலைமை மூலக்கூறுகளைக் கண்டறிந்து அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்ஸ் கோவிட் வைரஸின் கூட்டு புரதத்தை பிணைக்கலாம் என சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளார். இதனால் அனிகாவுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சி.என்.என் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளிக்கையில், என்னுடைய புராஜெக்ட் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பானது என்பதை தெரிந்தவுடன் கடந்த இரண்டு தினங்களாக ஊடங்கள் இதன் மீது கவனம் செலுத்தின என்று கூறினார்.

14-year-old girl,possible treatment,corona virus,indian girl ,14 வயது சிறுமி, சாத்தியமான சிகிச்சை, கொரோனா வைரஸ், இந்திய பெண்

மேலும் அவர், நான் மற்றும் எல்லோரும் விரும்புவதைப் போல நம்முடைய கூட்டு நம்பிக்கை இந்த கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவரும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவருடைய ஆராய்ச்சி, கொரோனா வைரஸைக் குணப்படுத்தக் கூடியது தொடர்பான ஆய்வு இல்லை.

சிலிகோ முறையின் மூலம், இன்புளுயன்ஸா வைரஸின் புரதத்தைக் பிணைக்கக்கூடிய தலைமை மூலக்கூறை கண்டறிவது தொடர்பானது. ஆரம்பத்தில், இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் புரதத்துடன் பிணைக்கக்கூடிய ஒரு முன்னணி கலவையை அடையாளம் காண இன்-சிலிகோ முறைகளைப் பயன்படுத்துவதே அவரது குறிக்கோளாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




Tags :