Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரான்சில் ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 17 வயது இளம்பெண் கைது

பிரான்சில் ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 17 வயது இளம்பெண் கைது

By: Karunakaran Sat, 07 Nov 2020 3:30:09 PM

பிரான்சில் ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 17 வயது இளம்பெண் கைது

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஆசிரியர் சாமுவேல் பட்டி, செசான்ய பயங்கரவாதியான அப்துல்லா அன்சோரவ் என்பவரால் கொல்லப்பட்டார். வரலாற்று ஆசிரியரான சாமுவேல் தனது வகுப்பறையில் முகமது நபியின் கேலிச்சித்திரங்களை காட்டியதால் உருவான பிரச்சினையால் கோபமடைந்த இஸ்லாமியர்களில் ஒருவரான அப்ட்துல்லா அவரை தலையை வெட்டிக் கொலை செய்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் பிரான்ஸ் நாடே கொதிப்படைந்தது, ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இஸ்லாமிய பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக உறுதியேற்றுக்கொண்டார். மேலும் கேலிச்சித்திரங்களை கைவிடப்போவதில்லை என்று கூறினார். இதனால் இஸ்லாமிய நாடுகள் அவர் மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றன.

17-year girl,arrest,teacher,france ,17 வயது சிறுமி, கைது, ஆசிரியர், பிரான்ஸ்

இந்த கொலை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இப்போதைக்கு இந்த வழக்கில், 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் உட்பட, பத்து பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், அப்துல்லாவுடன் தொடர்பிலிருந்ததாக சந்தேகத்தின்பேரில் பிரான்ஸ் நாட்டு இளைஞர் ஒருவரும், செசன்ய நாட்டு இளைஞர் ஒருவரும், கடந்த செவ்வாயன்று கைது செய்யப்பட்டனர்.

அந்த இளைஞர்களில் ஒருவருடன் அந்த 17 வயது இளம்பெண் தொடர்பு வைத்திருந்திருக்கிறார். ஆகவே, அந்த இளம்பெண்ணும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது பிரான்சில் ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 17 வயது இளம்பெண் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
|