Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரேசிலில் நீச்சல் குளத்தில் மூழ்கிய தனது நண்பனை காப்பாற்றிய 3 வயது சிறுவன்

பிரேசிலில் நீச்சல் குளத்தில் மூழ்கிய தனது நண்பனை காப்பாற்றிய 3 வயது சிறுவன்

By: Karunakaran Thu, 27 Aug 2020 08:46:29 AM

பிரேசிலில் நீச்சல் குளத்தில் மூழ்கிய தனது நண்பனை காப்பாற்றிய 3 வயது சிறுவன்

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இடாபெருனா பகுதியில் ஆர்தர் டி ஒலிவியரா என்ற 3 வயது சிறுவன் வசித்து வருகிறான். ஆர்தர் சிறிய நீச்சல் குளம் ஒன்றில் பொம்மையை தூக்கி போட்டு அதனை தள்ளி விட்டு விளையாடி கொண்டிருந்துள்ளான். அவனுடன் சேர்ந்து வந்த ஹென்ரிக் என்ற 3 வயதுடைய அவனது நண்பன் ஆர்தருடன் சேர்ந்து தண்ணீரை தள்ளி விட்டுள்ளான்.

இருவரும் விளையாடி கொண்டிருந்த போது, திடீரென ஹென்ரிக் நீச்சல் குளத்திற்குள் தவறி விழுந்து விட்டான். இதனால் என்ன செய்வது என்று தெரியாத ஆர்தர் உதவிக்காக அக்கம் பக்கத்தை பார்த்துள்ளான். ஹென்ரிக் தலையை மேலே கொண்டு வர முயற்சித்துள்ளான். ஆனால், உதவிக்கு யாரும் இல்லாத நிலையில், ஆர்தர் துணிந்து குளத்தில் கையை நீட்டி துரிதமுடன் செயல்பட்டு, நண்பனை இறுக பிடித்து மேலே தூக்கி வெளியே கொண்டு வந்துள்ளான்.

3 year old boy,rescue,swimming pool,brazil ,3 வயது சிறுவன், மீட்பு, நீச்சல் குளம், பிரேசில்

இவை அனைத்தும் கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோவை ஆர்தரின் தாயார் பொலியானா கன்சோல் டி ஒலிவியரா பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அவர், ஆர்தரின் நண்பன் உயிர் பிழைத்ததற்கு எனது மனம் நன்றி சொல்கிறது. என்னுடைய மகனின் துணிச்சல், பாசம் மற்றும் உடனடியாக செயல்பட்டதற்காக நான் பெருமை கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

அவனது துணிச்சலான செயலை அறிந்த உள்ளூர் போலீசார், அவனுக்கு கூடை நிறைய இனிப்புகள் மற்றும் புது கூடைப்பந்து ஒன்றையும் பரிசாக அளித்து விட்டு சென்றனர். பின்னர் சான்றிதழ் மற்றும் கோப்பை ஒன்றும் சிறுவன் ஆர்தருக்கு வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு தரப்பினரும் ஆர்தருக்கு பாராட்டுகளை கூறி வருகின்றனர்.

Tags :
|