Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துருக்கி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 4 வயது சிறுமி 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு

துருக்கி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 4 வயது சிறுமி 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு

By: Karunakaran Tue, 03 Nov 2020 7:10:01 PM

துருக்கி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 4 வயது சிறுமி 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு

துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் கடந்த 31-ம் தேதி 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரை நகரமான இஸ்மிர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்பு சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. கடல்நீரும் சுனாமி அலைகளாக நகரின் பல்வேறு பகுதிகளுக்குள் நுழைந்தன.

இந்த நிலநடுக்கத்தால் 300-க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்த கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். பின்னர் அந்நாட்டு பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

4-year-old girl,rubble,turkish building,earthquake ,4 வயது சிறுமி, இடிபாடு, துருக்கிய கட்டிடம், பூகம்பம்

இருப்பினும் மீட்பு நடவடிக்கையில் போது பலரும் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர். தற்போது, நிலநடுக்கம் ஏற்பட்டு 91 மணிநேரம் கழித்து (சுமார் 4 நாட்கள்) 4 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அய்டா ஹிஸ்ஜின் என்ற பெயருடைய அந்த சிறுமி இடிபாடுகளுக்குள் சிக்கி 4 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அங்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மீட்பு பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
|