நீச்சல் குளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய 3 வயது சிறுவனை மீட்ட 5 வயது சிறுவன்
By: Nagaraj Sun, 23 Aug 2020 11:16:52 AM
3 வயது சிறுவனை காப்பாற்றிய 5 வயது சிறுவன்... பிரேசிலில் நீச்சல் குளத்தில் விழுந்து உயிருக்குப் போராடிய 3 வயது சிறுவனை 5 வயது கொண்ட மற்றொரு சிறுவன் காப்பாற்றிய நெகிழ்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.
தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள வீடு ஒன்றில் 5 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் விழுந்த பந்தினை எடுக்க முயன்றான். அப்போது அங்கு வந்த 3 வயதுடைய ஆர்தர் டி ஒலிவெரியா என்ற மற்றொரு சிறுவன் தானும் பந்தை எடுக்க முயன்றபோது நீச்சல் குளத்தில் தவறி விழுந்து நீருக்குள் மூழ்கினான்.
இதனைக் கண்டு செய்வதறியாது தரையிலிருந்த சிறுவன் திகைக்க, நீருக்குள் மூழ்கிய ஆர்தர் உயிருக்குப் போராடினான்.
இதனைக்
கண்ட ஆர்தரின் நண்பன் துரிதமாகச் செயல்பட்டு அவனை கரையேற்றினான். சிறுவன்
சாதுர்யமான செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்போது
வெளியாகியுள்ள இந்த வீடியோ பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.