Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் 50 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது

சென்னையில் 50 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது

By: Nagaraj Tue, 02 May 2023 10:37:48 PM

சென்னையில் 50 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது

சென்னை: பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது... சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வசந்த் தியேட்டர் அருகே உமர் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது.

ஸ்திரத்தன்மை இல்லாததால், கட்டடத்தை இடிக்க, மூன்று மாதங்களுக்கு முன், உரிமையாளருக்கு, சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. மாநகராட்சியின் அறிவிப்பை தொடர்ந்து, வீட்டில் இருந்தவர்கள் காலி செய்தனர். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லை.

50 years,50 ஆண்டு,chennai,old building,rain,yesterday , சென்னை, நேற்று, பழைய கட்டிடம், மழை

இந்நிலையில், நேற்று பெய்த மழையால், 50 ஆண்டுகள் பழமையான கட்டடம், அதன் உறுதித்தன்மையை இழந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக கட்டிடம் இடிந்து விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், இடிந்து விழுந்த கட்டிடத்தின் பகுதி சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எழும்பூர் மற்றும் வேப்பேரி தீயணைப்பு நிலையங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
|