Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சேமிப்பை கற்றுத்தர மாணவர்களுக்கான வங்கி துவங்கப்பட்டுள்ளது

சேமிப்பை கற்றுத்தர மாணவர்களுக்கான வங்கி துவங்கப்பட்டுள்ளது

By: Nagaraj Wed, 30 Nov 2022 9:41:31 PM

சேமிப்பை கற்றுத்தர மாணவர்களுக்கான வங்கி துவங்கப்பட்டுள்ளது

ஹைதராபாத்: சில்பூரில் உள்ள அரசுப் பள்ளியில், 10 முதல் 15 வயது வரையிலான மாணவர்களுக்கு சேமிப்பு மற்றும் வங்கிச் சேவை கற்பிக்கப்படுகிறது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இணைந்து வங்கியை தொடங்கி தாங்களே நிர்வகித்து வந்தனர்.

வீட்டு செலவுக்கு கொடுக்கும் பணத்தை சேமித்து அந்த வங்கி கணக்கில் சேமித்து வைக்கின்றனர். நீங்கள் இங்கே பணம் செலுத்தினால், ரசீது மற்றும் திரும்பப் பெறுவதற்கான படிவத்தைப் பெறுவீர்கள்.

மாணவர்களே மேலாளர்கள், காசாளர்கள், வங்கி ஊழியர்கள் போன்ற பதவிகளில் பணிபுரிகின்றனர். இந்த வங்கிக்கு ‘சில்பூர் பள்ளி வங்கி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வங்கி பாஸ் புத்தகம் வழங்கப்படுகிறது.

telangana,government,school , ஊக்குவிக்க வங்கி, தெலுங்கானா, அரசுப்பள்ளி

பள்ளி முதல்வர் லீலா நிருபர்களிடம் கூறுகையில், “”பள்ளிக்கு வங்கி அதிகாரி வரவழைக்கப்பட்டு, அவரது வழிகாட்டுதலின்படி, அக்.,15ல் மாணவர்களுக்கான வங்கி துவங்கப்பட்டது.

கடந்த 24ம் தேதி நிலவரப்படி, மாணவர்களின் வங்கி கணக்கில், 41 ஆயிரம் ரூபாய் இருந்தது. வங்கி செயல்படும் விதம், பணத்தின் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவர்கள் தெரிந்து கொண்டனர்,” என்றார்.

மாணவர்களிடையே சேமிப்பை ஊக்குவித்து வரும் இப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர். அதேபோல், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், ‘பள்ளி வங்கி’ துவங்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags :