Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தலைமை ஆசிரியர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி

தலைமை ஆசிரியர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி

By: Nagaraj Thu, 01 Sept 2022 6:13:55 PM

தலைமை ஆசிரியர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி

மேட்டூர்: தலைமை ஆசிரியர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக மாணவர்களும் பள்ளிக்கு செல்லவில்லை.

சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லிகுந்தம் ஊராட்சியில் உள்ளது வன்னியனூர் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிப்பட்டி, மல்லிகுந்தம், உப்புபள்ளம், மருக்கம்பட்டி கிராமங் களை சேர்ந்த 286 குழந்தைகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக சிவகுமார் (45) என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி, சிவகுமார் வாழதாசம்பட்டி பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல மறுத்தனர். பெற்றோரும் கடந்த 3 நாட்களாக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வன்னியனூர் கிராமத்தின் நுழைவு வாயிலில் கருப்பு கொடி கட்டிய மக்கள், அந்தப்பகுதியில் திரண்டனர். தலைமை ஆசிரியர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமாக புறப்பட்டு, சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வர முடிவு செய்தனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags :
|