Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகம் ... மக்களவை செயலகம் வெளியீடு

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகம் ... மக்களவை செயலகம் வெளியீடு

By: vaithegi Thu, 14 July 2022 08:19:54 AM

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகம் ... மக்களவை செயலகம் வெளியீடு

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இந்நிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.

இதனை அடுத்து அதில் ஆங்கில வார்த்தைகளும், இந்தி வார்த்தைகளும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

parliament,words that should not be used ,நாடாளுமன்றம்,பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்

மேலும் இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல போன்ற வார்த்தைகளும் இனிமேல் தடை செய்யப்படுகின்றன.

இதோடு முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் ஆகிய வார்த்தைகளும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றை பயன்படுத்தினால் சபை தலைவர்கள், சபை குறிப்பில் இருந்து நீக்கிவிடுவார்கள் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

Tags :