Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிறிய விமானத்தில் தனியே சுற்றி வந்து சாதனைப்படைத்த சிறுவன்

சிறிய விமானத்தில் தனியே சுற்றி வந்து சாதனைப்படைத்த சிறுவன்

By: Nagaraj Fri, 26 Aug 2022 7:08:14 PM

சிறிய விமானத்தில் தனியே சுற்றி வந்து சாதனைப்படைத்த சிறுவன்

பல்கேரியா: சிறுவனின் கின்னஸ் சாதனை... பல்கேரியவை சேர்ந்த 17 வயது சிறுவன் தன்னந்தனியாக சிறிய விமானத்தில் உலகை சுற்றி வந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளான்.

கடந்த மார்ச் 23ம் தேதி சிறிய விமானத்தில் தனது பயணத்தை தொடங்கிய சோஃபியாவை சேர்ந்த சிறுவன் மேக் ரூதர்ஃபோர்டு, 5 கண்டங்களில் இந்தியா, சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 52 நாடுகளை கடந்து பயணித்துள்ளான்.

achievements,confidence,boy,guinness,travel ,சாதனைகள், தன்னம்பிக்கை, சிறுவன், கின்னஸ், பயணம்

இந்த பயணத்தை முடிக்க 5 மாதங்கள் தேவைப்பட்டதாக கூறியுள்ள சிறுவன், தனது சாதனை தன்னை போன்ற சிறுவர்கள் சாதிப்பதற்கு ஊக்கமளிக்கும் என தெரிவித்துள்ளான்.


சாதனைகள் படைக்க தன்னம்பிக்கையும் மன உறுதியும் மட்டுமே தேவை வயது என்பது எப்பொழுதும் ஒரு பொருட்டல்ல என்பதற்கு இந்த சிறுவன் ஒரு சாட்சியாக உள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|