Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மெச்சி ஆற்றில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்தது

பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மெச்சி ஆற்றில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்தது

By: Nagaraj Sat, 24 June 2023 11:33:14 PM

பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மெச்சி ஆற்றில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்தது

பாட்னா: மற்றொரு பாலம் இடிந்தது... பீகாரில் தலைநகர் பாட்னாவில் இருந்து 400 கி.மீ. கிஷன்கஞ்ச் மாவட்டத்தின் தொலைதூரப் பகுதியில் மெச்சி ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் தூண் இன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த பாலம் கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹாரை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் கழகத்தின் திட்ட இயக்குனர் அரவிந்த் குமார் கூறியதாவது: கட்டுமான பணியின் போது மனித தவறு காரணமாக தூண் இடிந்து விழுந்தது.

accident,another bridge,bihar,one month, ,ஒரு மாதம், பீகார், மற்றொரு பாலம், விபத்து

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், இது குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ககாரியா மாவட்டத்தையும் பாகல்பூர் பகுதியையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வந்த பாலம் கடந்த 4ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது.
1,750 கோடி செலவில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. 2வது முறையாக சரிந்து விழுந்த சம்பவத்தில் காவலாளி ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள், மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|