Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரிட்டனில் நடந்த ஆய்வில் வெளியான தகவல்... செயல்திறன்களில் பாதிப்பில்லை

பிரிட்டனில் நடந்த ஆய்வில் வெளியான தகவல்... செயல்திறன்களில் பாதிப்பில்லை

By: Nagaraj Sat, 01 Oct 2022 10:37:33 AM

பிரிட்டனில் நடந்த ஆய்வில் வெளியான தகவல்... செயல்திறன்களில் பாதிப்பில்லை

பிரிட்டன்: பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை நடைமுறையை சில நிறுவனங்கள் ஆரம்பித்திருந்தது.


இது குறித்த முன்னோட்டத்திட்டத்தில் பங்கேற்கும் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களின் செயல்திறனில் பாதிப்பில்லை என்று கூறியுள்ளன.


பிரித்தானியாவில் மேற்கொள்ளப்படும் 6 மாத முன்னோட்டத்தில் 73 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 41 நிறுவனங்கள் பங்கேற்ற கருத்தாய்வில் 35 நிறுவனங்கள் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை நடைமுறையை வழக்கமாக்க விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவியவந்துள்ளது.

russia,action,condemnation,ukraine president,plea,officials ,கலந்துரையாடல்கள், பிரித்தானியா, நடைமுறை, 4 நாட்கள், வேலை

இதன்போது 39 நிறுவனங்கள் ஊழியர்களின் செயல்திறன் மேம்பட்டுள்ளது அல்லது இதற்கு முன்னர் மேற்கொண்டது போன்றே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவற்றில் செயல்திறன் அதிகளவில் மேம்பட்டிருப்பதாக 6 நிறுவனங்கள் குறிப்பிட்டன.


வாரத்துக்கு 4 நாட்கள் வேலை நடைமுறையால் ஊழியர்களுக்குச் சொந்த வேலைகளுக்கு நேரம் ஒதுக்கக் கூடுதல் வாய்ப்பிருப்பதாக முதலாளிகள் சிலர் தெரிவித்தனர். அது ஊழியர்களின் நலனை மேம்படுத்துவதுடன் அவர்களுடைய செயல்திறனையும் அதிகரிக்கச் செய்துள்ளதாக அவர்கள் கூறினர்.

இந்த திட்டம் வெற்றியளித்துள்ளமையினால் பிரித்தானியா முழுவதும் எதிர்வரும் நாட்களில் இந்த நடைமுறை முழுமையாக அமுல்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது.

Tags :
|
|
|