Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிக்கமகளூரு அருகே நடக்க இருந்த குழந்தை திருமணம்... அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்

சிக்கமகளூரு அருகே நடக்க இருந்த குழந்தை திருமணம்... அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்

By: Nagaraj Fri, 10 Feb 2023 04:39:28 AM

சிக்கமகளூரு அருகே நடக்க இருந்த குழந்தை திருமணம்... அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்

கடூர்: குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர்... கடூரில் பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா குட்டேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது பெண். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், மாணவியின் படிப்பை பாதியில் நிறுத்தி அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.

அதன்படி அவருக்கும் தாவணகெரேயை சேர்ந்த 23 வயது வாலிபருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தமும் முடிந்தது. இதையடுத்து அவர்களின் திருமணம் வருகிற 21-ந்தேதி நடக்க இருந்தது.

student,marriage,arrested,officials,action ,மாணவி, திருமணம், தடுத்துநிறுத்தினர், அதிகாரிகள், நடவடிக்கை

இந்த நிலையில் பள்ளி மாணவிக்கு குழந்தை திருமணம் நடப்பது பற்றி குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக மாணவியின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். அப்போது மாணவிக்கு 17 வயது தான் ஆவதும், அவருக்கு குழந்தை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயற்சித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 18 வயது பூர்த்தி அடைவதற்குள் திருமணம் செய்து வைக்கக்கூடாது என்று மாணவியின் பெற்றோருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் 21-ந்தேதி நடக்க இருந்த திருமணத்தை நிறுத்திய அதிகாரிகள், மாணவியை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :