Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தடுப்புச்சுவரை தாண்ட முடியாமல் தவித்த குட்டியானை; உதவிக்கு வந்தது தாய் யானை

தடுப்புச்சுவரை தாண்ட முடியாமல் தவித்த குட்டியானை; உதவிக்கு வந்தது தாய் யானை

By: Nagaraj Sat, 04 July 2020 5:40:52 PM

தடுப்புச்சுவரை தாண்ட முடியாமல் தவித்த குட்டியானை; உதவிக்கு வந்தது தாய் யானை

இயற்கையை யாராலும் கணிக்க முடியாது என்பார்கள். அதேபோல் தாயின் பாசத்தையும் யாராலும் எங்கும் கணிக்கவும் முடியாது. அளவிடவும் முடியாது. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களுக்கும்தான்.

நீலகிரி மாவட்டத்தில் மலைப்பாதையில் சாலை தடுப்புச்சுவரை பெரிய யானைகள் எளிதாக கடந்து சென்று விட பிறந்து சில நாட்களே ஆன குட்டியானையால் அது முடியவில்லை. இதனால் அந்த தடுப்புச்சுவரை கடக்க திணறியது, தவித்தது. இருப்பினும் முயற்சியை தொடர்ந்தது. அப்போது தாய் யானை பரிதவித்து வந்து குட்டியானை அரவணைத்து சுவற்றை தாண்ட உதவியது. இந்த வீடியோதான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

mother elephant,cub,road block,hunger,elasticity ,தாய் யானை, குட்டியானை, சாலை தடுப்பு, தவிப்பு, நெகிழ்ச்சி

கூடலூரில் இருந்து கேரள மாநிலம் செல்லும் சாலையில் வாகன ஓடுனர்கள் இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். பிறந்த சில நாட்களே ஆன அந்த குட்டியானை சாலையின் தடுப்பை தாண்ட முடியாமல் தவித்தது. அப்போது மேலே சென்ற தாய் யானை மீண்டும் கீழே வந்து குட்டியை தூக்கிவிட்டு விட்டு மேலே சென்றது.

இச்சம்பவம் பார்ப்பவர்களின் அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் பாசத்தை கண்டு அனைவரும் வியந்துதான் போய்விட்டனர்.

Tags :
|
|