Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தன்னார்வலர்கள் உதவ கிராமமே இணைந்து சமைத்து பசியாறும் சமுதாய சமையலறை

தன்னார்வலர்கள் உதவ கிராமமே இணைந்து சமைத்து பசியாறும் சமுதாய சமையலறை

By: Nagaraj Fri, 22 May 2020 10:21:30 AM

தன்னார்வலர்கள் உதவ கிராமமே இணைந்து சமைத்து பசியாறும் சமுதாய சமையலறை

கோவை, காரமடை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கிறது கெத்தைக்காடு. இருளர் இனமக்கள் வசிக்கும் கிராமம். கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பு இல்லாமல் இந்த மக்கள் தவிக்கின்றனர்.

வேலை இல்லை, அதனால் வருமானமும் இல்லை. ஆனால் பசி... பெரியவர்கள் கூட பசியை தாங்கி கொள்வார்கள். குழந்தைகளின் நிலை. பேருந்துகளும் இயங்காததால் கையிருப்பை வைத்து அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க வெளியே செல்ல முடியாமல் வீடுகளில் இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் முடங்கினர்.


community kitchen,mountain people,volunteers,food ,சமுதாய சமையலறை, மலைவாழ் மக்கள், தன்னார்வலர்கள், உணவு

இந்த தகவல் அறிந்து தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து மலைக்கிராம மக்களுக்கு உதவ சமுதாய சமையலறை திட்டத்தை
செயல்படுத்தியுள்ளனர். அந்த கிராமத்திற்கு சமைக்கும் அளவுக்கு
அரிசி, மளிகை, காய்கறிகளை தன்னார்வலர்கள் கொண்டு வந்து கொடுக்கின்றனர்.

அதை பயன்படுத்தி, கிராம மக்களே ஒரே இடத்தில் சமைக்கின்றனர். பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு பசியாற்றி வருகின்றனர். தன்னார்வலர்களால் தங்களின் குடும்பத்தினர் பசியில் வாடாமல் இருக்கின்றனர் என்று இக்கிராம மக்கள் நன்றியும் தெரிவித்துள்ளனர்.

Tags :