Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2020-ல் இந்தியாவை உலுக்கிய முக்கிய சம்பவங்களின் தொகுப்பு

2020-ல் இந்தியாவை உலுக்கிய முக்கிய சம்பவங்களின் தொகுப்பு

By: Karunakaran Tue, 22 Dec 2020 09:33:14 AM

2020-ல் இந்தியாவை உலுக்கிய முக்கிய சம்பவங்களின் தொகுப்பு

2020-ம் ஆண்டில் இந்தியாவை உலுக்கிய சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கடுமையான சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த 2020ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் விடைபெறுகிறது. ஜனவரி 30-ல் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று முதல் நோயாளி கண்டறியப்பட்டார். பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தடைந்தார்.

பின் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த மோதல் கலவரமாக வெடித்தது. மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு முதல்முறையாக 14 மணி நேர பொது முடக்கத்தை அறிவித்தது. ஏப்ரல் மாதம் மத்திய அரசு அறிவித்த பொது முடக்கம் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பை டிராக் செய்யும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆரோக்ய சேது எனும் செயலி வெளியிடப்பட்டுள்ளது.

major events,india,2020,corona virus ,முக்கிய நிகழ்வுகள், இந்தியா, 2020, கொரோனா வைரஸ்

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன வாயு கசிந்து 13 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. மேற்கு வங்காள மாநிலத்தை அம்பன் புயல் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டது. அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் மகாராஷ்டிர மாநிலம் அலிபாக்கில் கரைகடந்தது. ராய்காட் மாவட்டம் பெரும் சேதத்தை சந்தித்தது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த ஜூன் 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. டிக் டாக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. கேரளாவில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது.

major events,india,2020,corona virus ,முக்கிய நிகழ்வுகள், இந்தியா, 2020, கொரோனா வைரஸ்

இந்திய கடற்படையை வலுப்படுத்தும் விதமாக, பிரான்சில் இருந்து வாங்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் அரியானாவின் அம்பாலா விமான நிலையத்தில் தரையிறங்கின. டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ், படாலா மற்றும் டார்ன்தரன் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த பலர் விஷ சாராயம் குடித்தனர்.

அயோத்தி ராமர் கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு 190 பேருடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்திற்குள்ளானது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 தமிழர்கள் உள்பட 24 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

major events,india,2020,corona virus ,முக்கிய நிகழ்வுகள், இந்தியா, 2020, கொரோனா வைரஸ்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகினர். டெல்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார். உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்துக்கு இந்தியா சென்றது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல் கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட 32 பேரை விடுவித்தது சுப்ரீம் கோர்ட். இமாசல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனரும், மத்திய நுகர்வோர் விவகாரத்துறை மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் காலமானார். பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் நடைபெற்றது. இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது.

major events,india,2020,corona virus ,முக்கிய நிகழ்வுகள், இந்தியா, 2020, கொரோனா வைரஸ்

3 கட்டமாக நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்கள் பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. பாகிஸ்தான் ராணுவம் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 4 ஆயிரத்து 52 முறை எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார். பீகார் மாநிலத்தின் முதல் மந்திரியாக 7-வது முறையாக நிதிஷ் குமார் பொறுப்பேற்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து கூறினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அசாம் மாநில முன்னாள் முதல் மந்திரியுமான தருண் கோகாய் உடல்நலக் குறைவால் காலமானார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அகமது படேல் காலமானார்.

major events,india,2020,corona virus ,முக்கிய நிகழ்வுகள், இந்தியா, 2020, கொரோனா வைரஸ்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் தங்கள் நலனுக்கு எதிரானவை என்பதால், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர். ஆந்திராவின் எலுரு என்ற நகரின் பல இடங்களில் வசித்த 270 பேர் மர்ம நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் சார்பில் நாடு முழுவதும் முழு அடைப்பு நடைபெற்றது.

தலைநகர் டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரியுமான மோதிலால் வோரா காலமானார். மொத்தத்தில் 2020-ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஆதிக்கம் நிறைந்ததாக அமைந்துவிட்டது. வரும் 2021-ம் ஆண்டு அனைத்து மக்களுக்கும் நம்பிக்கையும், புதிய முன்னேற்றத்தையும் கொடுக்கும் ஆண்டாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|
|