Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல்-அமைச்சர் தலைமையில் இன்று அனைத்துத்துறை செயலாளர்களுடன் விரிவான ஆலோசனை கூட்டம்

முதல்-அமைச்சர் தலைமையில் இன்று அனைத்துத்துறை செயலாளர்களுடன் விரிவான ஆலோசனை கூட்டம்

By: vaithegi Tue, 13 Sept 2022 12:37:21 PM

முதல்-அமைச்சர்  தலைமையில் இன்று அனைத்துத்துறை செயலாளர்களுடன் விரிவான ஆலோசனை கூட்டம்

சென்னை: முதல்-அமைச்சர் இன்று அனைத்துத்துறை செயலாளர்களுடன் விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தினார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று அனைத்து துறை செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி பங்கேற்றனர்.

மேலும் இக்கூட்டத்தில் நிதித்துறை செயலாளர் முருகானந்தம், கூட்டுறவு உணவுப் பொருள் பாதுகாப்பு துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், ஊராட்சி துறை செயலாளர் அமுதா, வேளாண்மை துறை செயலாளர் சமயமூர்த்தி, பொதுப்பணித் துறை செயலாளர் மணிவாசன், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, வருவாய்த் துறை செயலாளர் குமார் ஜெயந்த், இளைஞர் நலன் விளையாட்டுதுறை செயலாளர் அபூர்வா உள்பட 35-க்கும் மேற்பட்ட அரசுத்துறை செயலாளர்கள் பங்கேற்றனர்.

consultation meeting,m.k.stalin,secretaries of all departments , ஆலோசனை கூட்டம்,,மு.க.ஸ்டாலின்,அனைத்துத்துறை செயலாளர்கள்

இதை அடுத்து கூட்டத்துக்கு வந்த அனைவரையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார். தொடக்க உரையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது ஒவ்வொரு துறை வாரியாக செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் நிலை பற்றி துறை செயலாளர்கள் விரிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும், இதுவரை எந்த அளவுக்கு பணிகள் நடைபெற்றுள்ளன என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடு எந்த அளவு உள்ளது, தற்போதைய நிலை என்ன என்பது பற்றியும் கேட்டறிந்தார். மக்களுக்கான திட்டங்களை விரைந்து முடிக்க பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் எத்தனை திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்பதையும் அவர் ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் துறைவாரியாக ஒவ்வொரு செயலாளர்களும் விரிவாக விளக்கம் அளித்து பேசினார்கள்.இந்த ஆலோசனையில் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Tags :