Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வீட்டை கப்பல் வடிவில் கட்டி அசத்தியுள்ள மேற்கு வங்க கட்டுமானத் தொழிலாளர்

வீட்டை கப்பல் வடிவில் கட்டி அசத்தியுள்ள மேற்கு வங்க கட்டுமானத் தொழிலாளர்

By: Nagaraj Fri, 14 Apr 2023 11:58:49 PM

வீட்டை கப்பல் வடிவில் கட்டி அசத்தியுள்ள மேற்கு வங்க கட்டுமானத் தொழிலாளர்

மேற்குவங்கம்: கட்டுமானத் தொழிலாளி ஒருவர் கப்பலின் வடிவில் தன் வீட்டை கட்டியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கட்டுமான தொழிலாளி மின்டோரா. சுமார் 25 வருடங்களுக்கு முன்பு சிலிகுறியில் உள்ள ஃபசிடவா பகுதியில் இவரது குடும்பம் மொத்தமாக குடி பெயர்ந்துள்ளது. தொடர்ந்து விவசாயம் செய்து வந்துள்ளார்.

இவர் கொல்கத்தாவில் வாழ்ந்த போதிலிருந்தே தன்னுடைய கனவு இல்லத்தை கப்பலின் வடிவத்தில் கட்ட வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார். இதற்காக பல்வேறு பொறியாளர்களை அணுகியும் பயணில்லை. அதனால், அவரே இந்த கப்பல் வீட்டை கட்டியுள்ளார்.

ஆனால் இவர் வீடு கட்ட ஆரம்பித்து சில நாட்களிலேயே பணப்பற்றாக்குறை ஏற்பட தன்னுடைய வீட்டை கட்டுவதற்காக நேபாளத்திற்கு சென்று மூன்று வருடங்கள் கட்டுமான வேலை செய்துள்ளார்.

ship,income,house,construction worker,restaurant ,கப்பல், வருமானம், வீடு, கட்டுமானத் தொழிலாளி, உணவகம்

அதில் கிடைந்த அனுபவம், ஆர்வம் உதவியாக இருந்ததாக கூறியுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு இவர் இந்த வீட்டை கட்ட ஆரம்பித்துள்ளார்.

39 அடி நீளமும் 13 அடி அகலமும 30 அடி உயரமும் கொண்டுள்ளது. அந்த பகுதியின் ஒரு முக்கியமான சுற்றுலா தளமாக இந்த வீடு மாறியுள்ளது. தன்னுடைய தாயின் பெயரை அந்த வீட்டிற்கு வைத்துள்ளார். இந்த வீட்டின் கட்டுமானத்திற்கு 15 லட்சம் ரூபாய் வரை இவர் செலவு செய்துள்ளார்.

அடுத்த வருடம் இந்த வீட்டை முழுவதுமாக கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதன் பிறகு இந்த வீட்டிற்கு மேல் தளத்தில் ஒரு உணவகத்தை அமைத்து அதன் மூலம் வருமானம் ஈட்ட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|
|