Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

By: vaithegi Thu, 09 Feb 2023 10:47:57 AM

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

சென்னை: இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை .... சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய உள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் திட்டங்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி முதலமைச்சர் கேட்டறிவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

chief minister,consultative meeting ,முதல்-அமைச்சர் ,ஆலோசனை கூட்டம்

அரசின் திட்டங்கள் தகுதியுள்ள பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்யும் நடைமுறைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து கூட்டத்தில், திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த, சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் முதலமைச்சர் எடுத்துரைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :