Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

By: vaithegi Sat, 12 Aug 2023 3:22:39 PM

மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

சென்னை: குடும்ப தலைவிகளுக்கான ரூ.1,000 உரிமைத்திட்டத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை ..தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வருகிற செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

எனவே இதற்கான விண்ணப்பதிவு முதல் கட்டமாக முகாம்கள் அமைக்கப்பட்டு கடந்த ஜூலை 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. 2-ம் கட்ட பதிவானது ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி வருகிற 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

chief minister stalin,womens enfranchisement scheme , முதல்வர் ஸ்டாலின் ,மகளிர் உரிமைத்தொகை திட்டம்

இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி ,

இதனை அடுத்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :