Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாஜக மாவட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது

பாஜக மாவட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது

By: vaithegi Thu, 05 Oct 2023 09:58:47 AM

பாஜக மாவட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது


சென்னை: தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வரும் நிலையில் அண்ணாமலைக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஒன்று ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சமீபத்தில் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து தெரிவித்த கருத்து ஆனது சர்ச்சையை கிளப்பிய நிலையில் பாஜக அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

எனவே இதன் அடிப்படையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டு பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி வைக்கப் போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றம், சட்டமன்றம் உள்ளிட்ட எத்தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது எனவும் அதிமுக தலைமையில் மீண்டும் புதிய கூட்டணி அமைக்கப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

consultative meeting,bjp , ஆலோசனை கூட்டம்,பாஜக

இச்சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். கூட்டணி முறிவு தொடர்பாக அவர் பாஜக தலைவர்களை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்பட்டது. இந்த சூழலில் சென்னையில் கடந்த 3ஆம் தேதி நடைபெற இருந்த பாஜக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை அமைந்தகரையில் இன்று நடைபெறவுள்ளது.

Tags :