Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் ஜுன் 1ம் தேதி வரை பிரித்தானியாவில் ஊரடங்கு நீட்டிப்பு; பிரதமர் அறிவிப்பு

வரும் ஜுன் 1ம் தேதி வரை பிரித்தானியாவில் ஊரடங்கு நீட்டிப்பு; பிரதமர் அறிவிப்பு

By: Nagaraj Mon, 11 May 2020 09:36:39 AM

வரும் ஜுன் 1ம் தேதி வரை பிரித்தானியாவில் ஊரடங்கு நீட்டிப்பு; பிரதமர் அறிவிப்பு

ஜூன் 1 வரை பிரித்தானியாவில் ஊரடங்கு... கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரித்தானியாவில் ஊரடங்கை ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

சீனாவில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

britain,curfew,extension until june 1,prime minister boris johnson ,பிரித்தானியா, ஊரடங்கு, ஜூன் 1 வரை, நீட்டிப்பு, பிரதமர் போரிஸ் ஜான்சன்

வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. கடந்த மார்ச் 23 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், பிரித்தானியாவில் ஜூன் 1-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. ஜூலை 1- முதல் சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது என்றார்.

Tags :
|