Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துக்கம் அனுசரிக்க தினம் 8.3 மில்லியன் டாலர் செலவு ஏற்பட்டதாம்

துக்கம் அனுசரிக்க தினம் 8.3 மில்லியன் டாலர் செலவு ஏற்பட்டதாம்

By: Nagaraj Mon, 03 Oct 2022 08:41:54 AM

துக்கம் அனுசரிக்க தினம் 8.3 மில்லியன் டாலர் செலவு ஏற்பட்டதாம்

கனடா: கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி மாகாணத்தில் துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இந்த துக்க தினத்திற்காக மாகாண அரசாங்கம் 8.3 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. பாடசாலைகள், நீதிமன்றங்கள் என்பன மூடப்பட்டதுடன் பொதுத்துறை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

சுகாதாரத்துறை சேவைகள் வழமை போன்று இயங்கியதுடன் சுற்றுலாத்துறை மற்றும் ஏனைய வர்த்தக நிறுவனங்கள் தேவை என்றால் திறக்க முடியும் என அறிவிக்கப்பட்டது. விடுமுறை அறிவிக்கப்பட்ட காரணத்தினால் சுகாதாரத்துறை மற்றும் நீண்டகால பாராமரிப்பு நிலையங்களில் பணியாற்றுவோருக்கு மேலதிக கொடுப்பனவு வழங்க நேரிட்டது.

provincial finance minister,maharani,anjali,public holiday,health department ,மாகாண நிதி அமைச்சர், மகாராணி, அஞ்சலி, பொது விடுமுறை, சுகாதாரத்துறை

இதனால் சுமார் 7.1 மில்லியன் டொலர்கள் இந்த கொடுப்பனவிற்காக செலவிடப்பட்டுள்ளது. நோவா ஸ்கோட்டியாவின் நீதிமன்றத்துறைக்கும் மேலதிகமாக 1.2 மில்லியன் டொலர்கள் செலவிட நேரிட்டுள்ளது.


இந்த பொதுவிடுமுறையானது செலவு மிக்கது என்ற போதிலும் அநேகமான நோவா ஸ்கோட்டிய பிரஜைகள் மகாராணியை கௌரவிக்க வேண்டுமென கருதியதாக மாகாண நிதி அமைச்சர் அலன் மெக்மாஸ்டர் தெரிவித்துள்ளார். இவ்வாறு நோவா ஸ்கோட்டியாவில் துக்கம் அனுஸ்டிக்கப்பட்ட தினம் 8.3 மில்லியன் டாலர் செலவு ஏற்பட்டுள்ளது.

Tags :
|