Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைனின் கோரிக்கை குறித்து அடுத்த வார இறுதிக்குள் முடிவு செய்யப்படும் - ஐரோப்பிய ஆணைய தலைவர்

உக்ரைனின் கோரிக்கை குறித்து அடுத்த வார இறுதிக்குள் முடிவு செய்யப்படும் - ஐரோப்பிய ஆணைய தலைவர்

By: Monisha Sun, 12 June 2022 4:09:32 PM

உக்ரைனின் கோரிக்கை குறித்து அடுத்த வார இறுதிக்குள் முடிவு செய்யப்படும் - ஐரோப்பிய ஆணைய தலைவர்

கீவ் : உக்ரைன் மீது 3 மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா உள்பட பல நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருவதால், போர் நீடித்து கொண்டே செல்கிறது.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் அமைதி பேச்சுவார்தை நடத்த ஏற்பாடு செய்தன. இருப்பினும், இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியிலே முடிவடைந்துள்ளன. ரஷ்யாவை எதிர்த்து போரிட உதவ வேண்டும் என பல்வேறு நாடுகளிடம் உக்ரைன் அதிபர் கோரிக்கை விடுத்து வருகிறார். பல்வேறு நாடுகள் ஆயுத உதவி உள்பட பல்வேறு உதவிகளை உக்ரைனுக்கு செய்து வருகின்றன.

ukraine,zelensky,candidate-status,eu,cheif ,உக்ரைன், ஜெலென்ஸ்கி, வேட்பாளர் நிலை, ஐரோப்பிய ஒன்றியம், தலைமை

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றுகையில், உக்ரைனின் தென்கிழக்கு கெர்சன் மற்றும் ஜபோரிஜியா பிராந்தியங்களில், ரஷிய படைகளிடம் இருந்து கிராமங்கள் மற்றும் நகரங்களை உக்ரைன் படைகள் மீண்டும் கைப்பற்றிவிட்டது. எனினும், சிவியரோடோனெட்ஸ்க் பகுதியில் இன்னும் சண்டை தொடர்ந்து நடைபெறுகிறது. விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணையும் என்று கூறினார்.
இந்நிலையில், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா, உக்ரைனுக்கு சென்று ஜெலன்ஸ்கியைச் சந்தித்து பேசியபோது, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கான உக்ரைனின் கோரிக்கை குறித்து, அடுத்த வார இறுதிக்குள் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். இதுகுறித்து அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் என்ற அந்தஸ்து வழங்கும் முடிவு உக்ரைனை மட்டுமல்ல, முழு ஐரோப்பிய ஒன்றியத்தையும் வலுப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

Tags :
|