Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 18 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும்

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 18 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும்

By: vaithegi Mon, 23 Oct 2023 09:55:00 AM

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 18 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும்

சென்னை: வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நேற்று முன்தினம் தொடங்கியது. எனவே இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து வருகிற 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மிதமான மழை பெய்யக்கூடும்.

deep depression,central west bengal sea ,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,மத்திய மேற்கு வங்கக்கடல்

இந்த நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 18 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் உள்ளது.

வங்கதேசத்தின் சிட்டகாங் - கேபுபரா இடையே அக்.25 மாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.


Tags :