Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது ... வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது ... வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

By: vaithegi Thu, 02 Feb 2023 2:05:13 PM

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது   ...   வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று 11:30 மணி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 115 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இதனை அடுத்து இது மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று (02.02.2023) அதிகாலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

meteorological centre,depression ,வானிலை ஆய்வு மையம்,காற்றழுத்த தாழ்வு மண்டலம்

எனவே அதன்படி, தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் இலங்கையின் மட்டக்களப்பு - திரிகோணமலைக்கு இடையே அதிகாலை 3.30 மணியில் இருந்து 4.30 மணிக்குள் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :