Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது .. இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது .. இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

By: vaithegi Sat, 30 Sept 2023 2:52:10 PM

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது .. இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு


சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மத்திய கிழக்கு அரபிக்கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

india meteorological department,depression ,இந்திய வானிலை ஆய்வு மையம் ,காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இதற்கு முன்னதாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டு உள்ளது. வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Tags :