Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அலட்சியமாக வீசப்பட்ட முகக்கவசத்தில் கால்கள் சிக்கிக் கொண்டு தவித்த கடற்புறா

அலட்சியமாக வீசப்பட்ட முகக்கவசத்தில் கால்கள் சிக்கிக் கொண்டு தவித்த கடற்புறா

By: Nagaraj Fri, 24 July 2020 11:33:22 AM

அலட்சியமாக வீசப்பட்ட முகக்கவசத்தில் கால்கள் சிக்கிக் கொண்டு தவித்த கடற்புறா

அலட்சியமாக வீசப்பட்ட முகக்கவசத்தால் பறவை ஒன்று பட்டபாடு தற்போது தெரிய வந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் உலக நாடுகளில் முகக்கவசம் பாவனை என்பது இன்றியமையாததாக காணப்பட்டுள்ளதோடு, அத்தியவசிய தேவையாகியுள்ளது. இந்நிலையில் முகக்கவசங்கள் மனித உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம், ஆனால் அதனை உபயோகித்துவிட்டு ஆங்காங்கே அலட்சியமாக வீசும் முகக்கவசங்களால் விலங்குகளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக அமைகின்றது.

mask,guinea pig,suffering,indifference,humans ,முகக்கவசம், கடற்புறா, அவதி, அலட்சியம், மனிதர்கள்

பிரித்தானியாவில் கடற்புறா ஒன்றின் காலில் முகக்கவசம் சிக்கி ஒருவாரம் கழித்து அதனை மீட்டுள்ளனர். கடற்புறாவின் கால்களில் முகக்கவசம் நன்கு இறுக்கிய நிலையில் காணப்பட்டுள்ளது. இதனால் கடற்புறா பறப்பதற்கோ, நடப்பதற்கோ முடியாத நிலையில் இருந்துள்ளது.

பிரித்தானியாவின் தெற்கு எசெக்ஸ் வனவிலங்கு வைத்தியசாலை கடற்புறாவின் கால்களிலிருந்து முகக்கவசங்களை அகற்றியுள்ள நிலையில், குறித்த பறவை விரைவாக குணமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் மனிதர்கள் சிந்தித்து செயற்பட வேண்டுமென்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Tags :
|